Keyword
Category
Select a category History Kula deivam Temple Family deity saathanthai Kovil Pavala Kovil venduvan kovil Muthan Kovil
Search
கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர். கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர். ஊரை உருவாக்கிய மரபைச்சேந்தவர்களையே இவ்வாறு சகல முதல் மரியாதைகளையும் கொடுத்து அழைக்கின்றனர். இது பெரும்பாலும் கொங்கு வெள்ளாள (கொங்கு வேளாளர்) கவுண்டர்களுக்கே உள்ளது.